எமது நோக்கம்
முழுமையான தரமான ஒரு அலுவலகத்தின் மூலம் பிரதேச மக்களுக்கான சிறந்த பொதுச் சேவைஎமது குறிக்கோள்
முழுமையான தரமான ஒரு அலுவலகத்தின் மூலம் பிரதேச மக்களுக்கான சிறந்த பொதுச் சேவைசிலாபம் பிரதேச செயலகத்தின் வரலாறு
சிலாபம் பிரதேச செயலகமாது வடமேல் மாகாணத்தின் புத்தளம் நிர்வாக மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது வடக்கில் ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலகமும், தெற்கே மாதம்பை பிரதேச செயலகமும், கிழக்கில் குருநாகல் மாவட்டத்தின் பிங்கிரிய பிரதேச செயலகமும், மேற்கில் இந்து சமுத்திரத்திரமும் எல்லைகளாக அமைந்துள்ளன.சிலாபம் பிரதேச செயலகமாது வடமேல் மாகாணத்தின் புத்தளம் நிர்வாக மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது வடக்கில் ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலகமும், தெற்கே மாதம்பை பிரதேச செயலகமும், கிழக்கில் குருநாகல் மாவட்டத்தின் பிங்கிரிய பிரதேச செயலகமும், மேற்கில் இந்து சமுத்திரத்திரமும் எல்லைகளாக அமைந்துள்ளன.
சிலாபம் பிரதேச செயலகப் பிரிவில் சிலாபம் பிரதான நகரமாக சிலாபம் காணப்படகின்றது . சிலாபம் வடமேற்கு மாகாணத்தில் ஒரு பெரிய நகரமாகும், இது 6.4 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது, இது மேற்கில் அழகிய கடற்கரை மற்றும் குறுகிய குறுகிய கலப்புப்புதி மற்றும் வடக்கே தெதுரு ஓயா ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. இது வடக்கில் 7.35 அட்சரேகை மற்றும் கிழக்கில்79 அட்சரேகை மற்றும்47ம் ரேகை கோடுளை வெட்டும் இடத்தில் அமைந்துள்ளது.சிலாபம் நகரமானது புத்தளம் மாவட்டத்தின் மையத்தில் அமைந்துள்ளது. சிலாபம் பிரதேச செயலகப் பிரிவு கொழும்பு-புத்தளம் பிரதான வீதியுடன் சிலாபம்-குருணாகல் பிரதான வீதியுடன் இணைக்கப்பட்டுள்தோடு கொழும்பு-புத்தளம் புகையிரதப் பாதையில் அமைந்துள்ளமையினால், இது ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அமைந்துள்ளது இதனாலேயே, சிலாபம் பிரதேசம் ஒரு வர்த்தக மையமாகவும், நகர மையமாகவும் அறியப்படுகிறது.
சிலாபம் பிரதேசம் முற்காலத்தில் கடல் திரையாலும், மற்றும் இங்கு கணப்பட்ட முத்துக்களாலும் முத்து சிலாபம் என்று அழைக்கப்பட்டது. இந்த வளங்கள் இன்று கிடைக்காவிட்டாலும் சிலாபம் கடற்கரையோரமும் கலப்பும் மீன்பிடித் தொழிலுக்குப் பெயர் பெற்றவை. சிலாபம் கரையோரத்தில் வாழும் மக்களின் பிரதான வாழ்வாதாரம் மீன்பிடித்தொழிலாகும். சிலாபம் மற்றும் ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலக பிரிக்கும் எல்லைக்குட்பட்ட தெதுரு ஓயாவை அண்மித்த பிரதேசத்தில் விவசாயம் பெருமளவில் மேற்கொள்ளப்படுகிறது. இப்பிரதேச மக்களின் பிரதான வாழ்வாதாரமாக விவசாயம் உள்ளது. சிலாபம் பிரதேச செயலகப் பிரிவாது கடற்றொழில் மற்றும் விவசாயத்தின் மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிக்கிறது.சிலாபம் பிரதேச செயலகம் சிலாபம் தேர்தல் தொகுதிக்கு உட்பட்டது மற்றும் சிலாபம் நகரசபை மற்றும் சிலாபம் பிரதேச சபை ஆகியவற்றை உள்ளடக்கியது. இப் பிரிவு 49 கிராம அலுவலர் பிரிவுகளையும் 88 கிராமங்களையும் கொண்டுள்ளது. 2016 ஆம் ஆண்டின் தரவுகளின்படி, சிலாபம் பிரதேச செயலகப் பிரிவின் சனத்தொகை 70,800 ஆகும். பெரும்பான்மையான மக்கள் சிங்கள கத்தோலிக்கர்கள் என்தோடு மற்றும் பிற இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்களும் இங்கு வாழ்கின்றனர். இதன் காரணமாக சிலாபம் பிரதேசம் பல்லின மற்றும் பல மத கலாசார அடித்தளத்தை கொண்ட பிரதேசமாகத் திகழ்கின்றது.
Role performed at DS
| Name | From | To |
| W.J.Low | 1988 | 1995 |
| N.P.K Nelumdeniya | 1996 | 1998 |
| S.A.Surasingha | 1999 | 2002 |
| N.H.M.Chithrananda | 2002 | 2006 |
| U.S.N.Fernando | 2006.11.01 | 2014.05.19 |
| Rangana Fernando | 2014.06.04 | 2016.05.02 |
| D.M.A.K.Dissanayaka | 2016.05.02 | 2020.02.20 |
| B.W.M.M.S.Bandara | 2020.02.20 |












